முள்ளீவாய்க்காலை மறக்க கூடாது; தற்கொலை செய்துள்ள மாணவனின் வேண்டுதல்

சென்னை: சென்னை [^] நுண் கலைக் கல்லூரியில் நேற்று தற்கொலை [^]செய்து கொண்ட மாணவர் சசிக்குமார் எழுதியுள்ள கடிதத்தில், முள்ளிவாய்க்கால் சம்பவத்தை உலகம் மறந்தாலும், தமிழர்கள் [^] மறக்கக் கூடாது என்று எழுதியுள்ளதால் இந்தத் தற்கொலைக்கான காரணம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

சென்னை எழும்பூரில் உள்ள நுண்கலைக் கல்லூரியில் படித்து வந்த மதுரை விளாங்குடியைச் சேர்ந்த மாணவர் சசிக்குமார், கல்லூரி வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

அவர் எழுதி வைத்திருந்த கடிதம் போலீஸ் கையில் சிக்கியுள்ளது. அதில் அவர் எழுதியிருப்பதாவது…

உலக இனத்தில் தமிழ் இனம் தலை சிறந்த இனமாகும் உழைப்பதற்காக வாழ்ந்த உயர் தமிழன் அடிமைப்பட்டு கிடப்பதா? பாலைவனத்தை சோலைவனமாக மாற்றும் மந்திரவாதிகள் தமிழர்கள்.

முள்ளிவாய்க்கால் சம்பவத்தை உலகம் மறந்தாலும் நாம் மறக்க கூடாது. வீடு தோறும் மரம் வளர்ப்போம். இல்லையென்றால் குடிநீர் விற்பனையாவது போல, காற்றும் வியாபாரமாகி விடும்.

மரம் எழுப்பும் கொள்கைக்காக என்னையே சமர்ப்பிக்கிறேன். எனக்காக கண்ணீர் சிந்தாதீர்கள். வாழ்த்தி வழியனுப்புங்கள்.

தயவு செய்து எனது உடல் உறுப்புகளை தானம் கொடுத்துவிடுங்கள். பிறந்த பூமியில் என்னை தவழ விடுங்கள். அசையாத புகைப்படமாக இருப்பதைவிட அசைந்தாடும் மரமாக நான் எழுவேன்.

நிகழ்காலமே எதிர்காலத்திற்கு நீ நிழல் கொடு. தமிழே உனக்கு தெரியாமல் உன்னை நான் நேசிக்கிறேன் என்று எழுதியுள்ளார் சசிக்குமார்.

thatstamil

Leave a comment

இரண்டு கைகளும் இயலாமல் போனவனிற்கு ஒரு கையாவது கொடுங்கள்

இந்த நூற்றாண்டு எமது மக்களின் சோகப் பக்ககளை மட்டுமே காலப்பதிவாக்கி செல்கின்றது….பல இலட்சம் விழிகளிலிருந்து வழியும் கண்ணீரில் ஒரு சிலதையாவது துடைத்து செல்லும் எமது முயற்சியில் இதோ இன்னொருவனின் கதையிது…… திருகோணமலை மாவட்டம் அன்புவழிபுரம் கிராமத்தை சேர்ந்தவன். மிக வேகமாக சிங்கள மயமாகிவரும் திருகோணமலையில் செந்தமாய் செய்வதற்கு தொழில் வசதிகளேதுமற்று சமாதான காலத்தில் வன்னி சென்றால் வளமாய் வாழலாம் என்கிற கனவுகளுடன் குடும்பமாய் குடிபெயர்ந்தான்.கடந்த வருடம் வன்னியில் காவுகொள்ளப்பட்ட உயிர்களுடன் இவனது கனவுகளும் கலைந்து போனது மட்டுமல்லாமல் அவன் கைகளையும் இழந்து இன்று சொந்தக்கிராமத்திற்கே திரும்பியுள்ள நிலையில் நான்கு பிள்ளைகளுடனும் நாதியற்று நிற்பவனின் கதையை நீங்களே கேளுங்கள். இங்கு அழுத்துவதன் முலம் ஒலிப்பதிவினை கேட்கலாம்…

Posted Image
Posted Image

வைத்தியசாலை அத்தாட்சி
Posted Image

அடையாள அட்டை
Posted Image

Leave a comment

சிறீலங்காவின் இனப்படுகொலையின் இன்னொரு சாட்சியம் – கணேசபுரம் புதைகுழி

கிளிநொச்சி – கணேசபுரம் பகுதியில்
மலசலகூடக்குழியில் இருந்து மனித உடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
இருபதிற்கு மேற்பட்ட உடலங்கள் இதில் உள்ளடங்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறீலங்கா அரசின் இனப்படுகொலை வரலாறாக நீடித்துக்கொண்டே செல்கின்றது.
யாழ்ப்பாணத்தில் கிருசாந்தி என்ற பாடசாலை மாணவி பாலியல் வல்லுறவிற்கு
உட்படுத்தப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்ட நிலையில் மீண்டும் தோண்டி
எடுக்கப்பட்டது. இதனை செய்தது சிங்களப்படைதான் என்பது நீதிமன்றத்தினால்
உறுதி செய்து தீர்ப்பும் எழுதப்பட்டது.

இவ்வாறுதான் அன்று சத்ஜெய படை நடடிவடிக்கை மூலம் கிளிநொச்சியை
வல்வளைத்த சிறீலங்காப்படையினர் பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களை
பிடித்து படுகொலை செய்துவிட்டு மலசலகூட கிடங்குகளிலும் பாழடைந்த
கிணறுகளிலும் வீசினார்கள். பின்பு கிளிநொச்சியினை மீட்ட விடுதலைப்புலிகள்
உருத்திரபுரம், கணேசபுரம், முறிப்பு, கோணாவில் போன்ற பகுதிகளில் மக்கள்
குடியேறியபோது ஒன்று இரண்டாக எலும்புக்கூடுகுள் கண்டுபிடிக்கப்பட்டன.
இவ்வாறுதான் தற்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.
வன்னியில் இறுதிக்கட்ட போரின்போது முரசுமோட்டை பகுதியில் இருந்து
மக்களை பிடித்த சிறீலங்காப்படைகள் தொடர்ந்தும் கண்டாவளை, தர்மபுரம்,
உடையார்கட்டு, விசுவமடு, மூங்கிலாறு, தேவிபுரம், கைவேலி, இணைப்பாலை,
புதுக்குடியிருப்பு என்ற பகுதிகளில் எல்லாம் ஏராளமன தமிழ் இளைஞர்களை
பிடித்த சிறீலங்கா படையினர் களமுனையின் பின்களத்திலே வைத்து வடிகட்டல்
செயற்பாடுகளை மேற்கொண்டார்கள்.

குறிப்பாக இளம் இளையுஞர் யுவதிகள் தெரிவுசெய்யப்பட்டு பயங்கரவாத
முத்திரை குத்தப்பட்டு இளைஞர்கள் தனிமைப்படுத்தப்பட்டும், யுவதிகள்
சிறீலங்காப்படையின் காயமடைந்த படையினரின் பராமரிப்பிற்காக அரைகுறை
ஆடைகளுடன் விடப்பட்டார்கள். இப்படியான நடவடிக்கைகளின் பின்னர்தான்
குறிப்பிட்ட இடங்களில் பல்வேறு மனிதப்படுகொலைகளை சிங்களபடை அரங்கேற்றியது.
கைதுசெய்யபட்ட இளைஞர்கள் விசாரணை என்ற பெயரில் கை கால்கள் கட்டப்பட்ட
நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு சுட்டுப்படுகொலை செய்யப்பட்டு
குறிப்பிட்டுள்ள இடங்களில் பதுங்கு குழிகளுக்குள்ளும், பாழடைந்த
கிணறுகளுக்குள்ளும் போட்டு மூடப்பட்டார்கள். பெண்கள் சிங்களப்படையின்
புணர்ப்பிற்காக விடப்பட்டார்கள். களத்தில் போர் உக்கிரமடைந்த
காலகட்டங்களில் சிங்களப்படையினருக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் தமிழ்ப்
பெண்களை களமுனையில் படையினரின் தேவைக்கு பயன்படுத்தப்பட்டார்கள்.

இதன்பின்பு இவர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார்கள்
என்பது உண்மை. சிறீலங்கா அரசின் போர் குற்றங்கள் தொடர்பாக பல்வேறு
ஆதராங்களுடன் காணொளி ஒளிப்படம் போன்றவற்றின் உறுதிப்பாடுகளுடன்
உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மனித உரிமை அமைப்புக்களை மேலும்
துர்ண்டும் விதமாக கிளிநொச்சியின் கணேசபுரத்தின் படுகொலை புதைகுழி
காணப்படுகின்றது.
சிறீலங்கா அரசின் போர்க்குற்ற விசாரணையினை விசாரிக்க ஐக்கிய நாடுகள்
சபை செயலாளர் பான்கீமுன் அமைக்க இருக்கும் குழுவினை மழுங்கடிக்கும்
செயற்பாட்டில் சிறீலங்கா அரசினால் போர்க்குற்ற செயற்பாட்டுக்குழு ஒன்று
அமைக்கப்பட்டுள்ளமையானது ஐக்கிய நாடுகளின் குழுவினை சற்று பின்தள்ள
வைத்துள்ளது.

இன்நிலையில் மனித உரிமை அமைப்புக்களுக்கு வலுச்சேர்கும் முகமாகவும்,
சிறீலங்கா அரசினை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கான ஆதராமனா படுகொலை
ஒன்று கணேசபுர படுகொலை நடந்தேறியுள்ளது.
இந்த படுகொலையினை மையங்கொண்டு பன்நாட்டு மனித உரிமை அமைப்புக்கள்
சிறீலங்கா அரசின் போர்க் குற்றத்தினை ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துசெல்ல
சான்றாக காணப்படுகின்றது.
வன்னி பெருநிலப்பரப்பில் இவ்வாறு தான் இன்னும் மண்ணுக்குள் பல்லாயிரம்
மனித உடல்கள் சிங்களப்படையால் புதைக்கப்பட்டுள்ளது என்பது சிங்கள அரசின்
போர்க் குற்றத்திற்கு எதிரான சாட்டியமான எனது எழுத்துக்கள் அமைகின்றன.
– சங்கதிக்காக சுபன்

Leave a comment

புலிகளுக்கு ஆதரவு – ராமசாமி மீதான நடவடிக்கைக்கு இந்தியா கோரிக்கை

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாகப்பேசிய மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் ராமசாமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்நாட்டு அரசாங்கத்திடம் இந்தியா கோரியுள்ளது.

அண்மையில் மதுரையில் நடைபெற்ற சீமானின் “நாம் தமிழர் அரசியல் மாநாட்டில்” கலந்து கொண்ட அவர், இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியுள்ளதுடன் “மலேசியாவில் எங்கள் ஆட்சி அமைந்தால் அந்த இயக்கத்துக்கு அங்கீகாரம் வழங்குவோம்” என்றும் அறிவித்துள்ளார்.

இது குறித்து இந்திய உளவுத்துறை மத்திய அரசுக்கும், வெளியுறவுத்துறை அமைச்சுக்கும் அறிக்கையொன்றை கையளித்ததை அடுத்து அந்த அறிக்கை மலேசிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கோரிக்கை கடிதமொன்றையும் அனுப்பியுள்ளது. குறித்த கோரிக்கைக் கடிதத்திலேயே பினாங்கு மாகாண துணை முதல்வர் ராமசாமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று மலேசிய அரசாங்கத்திடம் இந்தியா கோரியுள்ளது.

Leave a comment

யேர்மனியில் இருந்து கொழும்பு சென்ற ஈழத்தமிழ்ப் பெண் கைது!

யேர்மனியில் இருந்து கொழும்பு சென்ற ஈழத்தமிழ்ப் பெண் ஒருவர் சிறீலங்கா காவல்துறைப் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் சிலாபம் பகுதியை பிறப்பிடமாகவும், யேர்மனி பிராங்போர்ட் பகுதியை வதிவிடமாகவும் கொண்ட ஐம்பது அகவையுடைய இவர், யேர்மனியில் இருந்து கடந்த புதன்கிழமை கொழும்பை வந்தடைந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

யேர்மனியில் கடந்த ஆண்டு தமது அரசாங்கத்திற்கு எதிராகவும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் முன்னெடுக்கப்பட்ட தொடருந்து மறியல் போராட்டங்கள், சாலை மறியல் போராட்டங்கள், பிராங்போர்ட்டில் உள்ள இந்திய உப தூதரகம் முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றில் இவர் முன்மையான பாத்திரத்தை வகித்ததாகவும் சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது.

Leave a comment

முள்ளிவாய்க்கால் முடிவுவரை ஓடியோடி உதவிய ஒரு உறவிற்காய் உதவுங்கள்

Posted Image
இவர்பெயர் வடிவேலு சதீஸ்கரன் முல்லைத்தீவு பொது வைத்திய சாலையில் ஒரு தொண்டு வைத்தியராக கடைமையாற்றியவர்.கடந்த வருடம் இறுதி யுத்தத்தின்போது குண்டுச்சத்தங்களும் அவலங்களும் ஓலங்களும் மட்டுமே நிறை;ந்திருந்த முல்லைத்தீவில் காயமடைந்தவர்களிற்கெல்லாம் ஓடியோடி கையிலிருந்த குறைந்த வளங்களை மட்டுமே வைத்துக்கொண்டு காயமடைந்தவர்களிற்கும். கைகால் இழந்தவர்களிற்கும் மருத்துவ முதலுதவி முயற்சிகளை மேற்கொண்டிருந்த சில சொற்ப வைத்தியர்களில் சதீஸ்கரனும் ஒருவர்.அவரின் ஒரு காலையும்(02.01.2004) எங்கிருந்தோ வந்த ஒரு ஏவுகணையென்று துண்டித்துப்போய்விட அவரும் அதே முல்லைத்தீவு வைத்திய சாலையின் படுக்கையில் வீழ்ந்தார். சிலமாதங்கள் சிகிச்சையின் பின்னர் ஒற்றைக்காலுடன் ஊன்றிய கோலுடனும் அவரது மருத்துவ சேவை அந்த மக்களிற்காக தொடர்ந்து கெண்டேயிருந்தது. இறுதியில் முல்லைத்தீவு மருத்துவ மனையும் குண்டுகளால் சிதைந்துபோக சிறிய கொட்டகைகள் மரநிழல்கள் எல்லாம் மருத்துவ மனைகளாக்கி இழந்துகொண்டிருந்த உயிர்களையும் முடிந்தவரை இழுத்துப்பிடித்து வைக்க முயற்சித்தார்கள்..இறுதியாய் 15.05.2099 வரை தன்னாலான சேவைகளை அந்த மக்களிற்காய் வழங்கியவர் பின்னர் அங்கிருந்து வெளியேறி அவரது ஒன்ரரை வயது சிறிய மகளுடன் குடும்பமாக திருகோணமலையில் வசித்துவரும் சதீஸ்கரன் தான் ஒரு சிறிய மருத்துவநிலையம்(கிளினிக்) ஒன்றினை நடத்தி தன்னுடைய குடும்பத்தினை காப்பாற்றுவதற்காக புலம்பெயர் உறவுகளே உங்களிடம் கை நீட்டுகிறார்..

இங்கு அழுத்துதன் மூலம் அவரது குரலினை நேடியாகக் கேட்கலாம்.

உதவிகோரி சதீஸ்கரன் எழுதிய கடிதம்.
Posted Image
சதீஸ்கரன் செல்வீச்சில் காயமடைந்து அவருடைய காலை இழந்ததற்கான வைத்தியசாலை அத்தாட்சி பத்திரம்.
Posted Image

Leave a comment

இலங்கை அரசின் போர்க்குற்றம் – மற்றொரு ஆதாரம் – காணொளி(கோரமானது)

இலங்கை அரசின் இனப்படுகொலை, போர்க் குற்றங்கள் குறித்த பல ஆவணங்கள் பல்வேறு தரப்பிலிருந்தும் வெளிவந்துள்ளன. கீழ் வரும் காணொளியில் மரணித்த புலி உறுப்பினர்கள் இலங்கை இராணுவம் விலங்குகளைப் போல வீசியெறிவதையும், இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதற்கு ஆதாரமாக கருகிய உடல்களையும் காணலாம். இந்தக் காணொளி பல சர்வதேச ஊடகங்களிற்கும், உரிமைக் குழுக்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தியப் படிப்பவர்கள் இவ் ஆவனத்தை மனித உரிமை அமைப்புக்களுக்கும் தமக்குத் தெரிந்த ஊடகங்களுக்கும் அனுப்பிவைக்கலாம். தொழில் நுட்பம் சார்ந்து ஆவணத்தை உறுதிப்படுத்த எம்மிடம் உரிய வசதிகள் இல்லை.
போரில் ஈடுபட்ட இராணுவத்திதைச் சேர்ந்த ஒருவரின் தொடர்பு ஊடாக இந்த ஆவணம் இனியொருவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
போதுமான அளவு ஆதாரங்கள் இருந்தும் அதிகார வர்க்கம் சார்ந்த மனித உரிமை அமைப்புக்கள் எந்த காத்திரமான நடவடிக்கைக்கும் தயாராக இல்லை. இலங்கையில் நடைபெற்றது போன்று உரிமைக்காகப் போராடும் பெரும்மான்மையான உலகமக்கள் இவ்வாறு கொல்லப்படலாம். இந்த வகையில் இலங்கையில் நடைபெற்ற மனிதப் படுகொலைகள் அதிகாரவர்க்கத்திற்கு ஒரு முன்னுதாரணம். ராஜபக்ச ஆட்சி தண்டனை பெறாமல் பாதுகாப்பதன் பின்னணி இதுதான்.
ஒவ்வொரு நாடுகளிலும் அந்த நாடுகளின் அரசுகளுக்கு குறைந்த பட்சம் அழுத்தங்களையாவது பிரயோகிக்க இவ்வகையான ஆவணங்களைப் பயன்படுத்தலாம் என்ற நோக்கில் இதனைப் பொதுத்தளத்தில் முன்வைக்கிறோம்.watch video:http://wellgaatamil.blogspot.com/

(This website and its Articles are copyright of inioru.com – © inioru.com 2007-2010. All rights reserved. For republication or reproduction please provide the complete link of the article and the name of this website. email:inioru@gmail.com).(இனியொரு இணையத் தளத்தில் வெளிவரும் கட்டுரைகளை மீள்பதிவு செய்யும் போது கட்டுரைக்கான தொடுப்பையும் தயவுசெய்து வெளியிடவும். அச்சு மீள்பதிவிற்கு அனுமதி பெற inioru@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் தொடர்புகொள்ளவும்.)

Leave a comment

இந்த நாடு பற்றிய தகவல்கள் மற்றும் விவாதங்களை தொடருங்கள்.

சைப்ரஸ் தீவின் துருக்கி மொழிச் சிறுபான்மையினர் இனப்பிரச்சினை காரணமாக
எழுந்த போரின் பின்னர் பிரிந்து தனி நாடு கண்டுள்ளனர். இன்று வரை
துருக்கியை தவிர உலகில் வேறு எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை…ஏன் இப்படி
ஒரு வழியிலாவது நாம் தமிழீழம் அமைக்கலாம்.

இந்த நாடு பற்றிய தகவல்கள் மற்றும் விவாதங்களை தொடருங்கள்.

http://en.wikipedia….Northern_Cyprus

Leave a comment

இராணுவத்தால் கைதுசெய்யப்பட்ட பிரான்சிஸ் யோசப் பாதிரியார் எங்கே?

இறுதி யுத்தத்தின் போது சிறிலங்காப் படையினரிடம் சரணைடைந்த பிரான்சிஸ் யோசப் பற்றிய தகவல்களை பெற்றுத்தருமாறு யாழ் ஆயர் இல்லம் கோரிக்கை விடுத்துள்ளது.
வன்னிப்பகுதியில் கடமையாற்றி வந்த குறித்த பாதிரியார் இறுதி யுத்தத்தின் போது சிறிலங்காப் படையினரின் கட்டுப்பாட்டுக்கு மக்களோடு வந்தபோது அவரை கைது செய்த சிறிலங்காப் படையினர் இது வரை அவர் தொடர்பான தகவல்களை வெளியிடவில்லை.
இவர் தொடாடபான தகவல்களை சிறிலங்கா அரசிடம் இருந்து பெற்றுத்தருமாறு அண்மையில் யாழ் குடா நாட்டுக்கு வருகை தந்த பரிசுத்த பாப்பரசரின் பிரதிநிதியிடம் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக யாழ் ஆயர் இல்லம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறீலங்காவின் படுகொலைகள் தற்போது ஆதாரங்களுடன் வெளிவரும் இந்நிலையில் பாதிரியார் தொடர்பாக – அவரின் நிலை தொடர்பாக அச்சம் அடைவதாக யாழில் பாதிரியார் ஒருவர் சங்கதி இணையத்துக்கு தெரிவித்துள்ளார்.
Leave a comment

சிறீலங்காப்படையினர் போராளியை வெட்டி கொலை செய்யும் கோரம்!

வன்னியில்
கடந்த வருடம் இறுதி யுத்தத்தில் சிறீலங்கா சிங்கள படைகளால் கைது
செய்யப்பட்ட போராளிகளை கோரமாக வதை செய்து கொன்றது தொடர்பாக மேலும் சில
காட்சிகள் தற்போது வெளிவந்துள்ளது.

சிறீலங்காவின் சிங்கள படைகளின் காட்டு மிரண்டிதனமான போர் குற்ற ஆத்ரம்களில் சிலதை Human Rights Watch send email வெளியிட்டுள்ளது.

இதில் ஒரு போராளியை தென்னை மரத்தில் கட்டி
வைத்து கத்தியால் வெட்டி வெட்டி சித்திரவதை செய்து கொலை செய்யும் கோர
காட்சிகளின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இச்செய்தியானது உலக தமிழ் மக்களை
உலுக்கியுள்ள இவ்வேளையில் எதிர்வரம் காலங்களில் மேலும் படங்கள் வெளிவரும்
என்பதும் இன்னும் ஒரு செய்தி உறுதிப்படுத்தியுள்ளது.

புலம்பெயர் தமிழ் மக்கள் மற்றும் தமிழக
உறவுகள் அனைத்து ஒரே வழியில் நின்று போராடவேண்டிய தேவையையும், சிறீலங்காவை
போர்க்குற்றத்திற்கான விசாரணைக்கு கொண்டுவர சர்வதேச சமூகத்துக்கு அழுத்தம்
கொடுக்க வேண்டும் என நலன்விரும்பிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக செய்திக்கு இங்கே அழுத்தவும்

Leave a comment