வலி சுமந்த நெஞ்சோடு விடுதலை நோக்கி பயணிப்போம்

வலி சுமந்த நெஞ்சோடு விடுதலை நோக்கி பயணிப்போம். யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகளால் பரபரப்பு(படங்கள் இணைப்பு)

Posted Image

Posted Image

Posted Image

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இரவு பல்கலைக்கழக வழாகத்தைச் சுற்றியும், மற்றும் சில தெருக்களிலும், மே 18 ஜ துக்கதினமாக அனுஷ்டிக்கச் சொல்லி துண்டுப் பிரசுரம், மற்றும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் இராணுவத்தினரும், அவர்களுடன் சேர்ந்து இயங்கும் குழுக்களும் இந்தச் சுவரொட்டிகளை அகற்றிவருகின்றனர்.
அத்தோடு துண்டுப் பிரசுரங்களும் இனம் தெரியாத நபர்களால் யாழ்ப்பாணப் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக யாழ் நிருபர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு நாளை மே 18 என்பதால் பல ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் யாழ் வீதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர் எனவும், இன்று பல்கலைக்கழக மாணவர்கள் அடையாள பகிஷ்கரிப்பு ஒன்றையும் நடாத்தியுள்ளனர் என்றும் அறியப்படுகிறது.
பல்லாயிரம் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் இப் பிரசுரம் வினியோகிக்கப்பட்டதும், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதும், மிகவும் துணிச்சலான விடையமாகும். சிவகுமார் எவ்வாறு ஒரு விடுதலை உணர்வை தூண்டினாரோ அதற்கு ஒப்பான நிகழ்வே தற்ப்போது மிகவும் துணிச்சலான முறையில் நடந்தேறியுள்ளது.

துண்டுப் பிரசுரங்களில் உள்ள வாசகங்கள் பின் வருமாறு:

வலி சுமந்த நெஞ்சோடு
விடுதலை நோக்கி பயணிப்போம் ……….

போராட்டமே வாழ்வாகிப்போன எம்மக்கள் இகாந்திய தேசத்தின் சூழ்ச்சியாலும், சிங்களத்தின் அடக்குமுறையினாலும் , முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டனர். 50,000 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள், அவலக்குரல் எழுப்பியும் ,அவர்களது சாவினை சர்வதேசத்தால் தடுத்து நிறுத்த முடியவில்லை…

மரணித்தது மக்கள் மட்டுமல்ல..உலகின் ஜனநாயக பண்புகளும் விழுமியங்களும்தான்…

பட்டினி போட்டு, குண்டுகள் வீசி, பாதுகாப்பு வலயத்திற்கு வாவென்று அழைத்து, அம்மக்களை கொன்ற கொடூரம் மன்னிக்கப்பட முடியாத போர்க்குற்றம்.

களமாடி விழுப்புண் அடைந்த வேங்கைகளும், எறிகணை வீச்சுக்களால் அங்கங்களை இழந்த பொது மக்களும், சுற்றி வளைத்து நின்ற சிங்கள-பிராந்திய அரக்கர்களால் மே 18 இல் வேட்டையாடப்பட்டனர்.

இந்த இன அழிப்பினை தடுத்து நிறுத்தப் போவது போல், சர்வதேச இராஜதந்திரக் கூத்தாடிகள் போக்குக்காட்டினர்.

இந்தியாவை மீறி, எந்த இராஜதந்திர அணுவும் அசைய மறுத்துவிட்டது.

கொதித்தெழுந்த புலம்பெயர் மக்களின் வேண்டுதலை எவருமே செவிமடுக்கவில்லை.

தமிழின அழிவை உலகிற்கு உணர்த்த, ஐ .நா.முன்றலில் தனது உடலை தீயில் சங்கமமாக்கினான் வேங்கை முருகதாஸ்.

சாஸ்திரி பவனில், தோழன் முத்துக்குமார் மூட்டிய பெரு நெருப்பு,தமிழகத்தில் தமிழின உணர்வினை தட்டி எழுப்பியது.

அனைத்துலக ஆதிக்க மனிதர்களின் நலன்களுக்குள் இ ஈழத்தமிழினத்தின் அவலக்குரல் கரைந்து போயிற்று.

இன்னமும் அவல வாழ்வு தொடர்கின்றது.

ஒரு இலட்சம் மக்களின், வதை முகாம் அவலம் குறித்து பேரினவாத அரசு கவலை கொள்ளவில்லை.

மறுபடியும் வெள்ளை வான் கும்பலின் அடக்குமுறைகள் விரிவடைகின்றன. கொதிநிலைப் பூமியாக மாறுகிறது யாழ் குடா.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின், வலிமிகுந்த நினைவு சுமந்து, எழுச்சி கொள்ளும் இந்நாளில், அந்த மாவீரர்களின்-பொது மக்களின் உறுதி தளரா இலட்சிய வேட்கையை, நாம் மனதில் இருத்திக்கொள்வோம்.

விழ விழ எழுவோம்.. இலட்சியம் நோக்கிய பயணத்தில், இறுதிவரை இணைந்திருப்போம்..

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

நன்றி – மனிதன் இணையம்

Leave a comment

தமிழ்பேசும் உறவுகளுக்கு களமுனைப்போராளியின் வேண்டுகோள்……………………

தமிழீழம்

17.05.2010

எம் உயிரிலும் மேலான தமிழ்பேசும் மக்களே!
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக எமது விடுதலைப் போராட்டம் சந்தித்த சவால்களும்,நெருக்கடிகளும் எண்ணிப்பார்க்க முடியாதவை.

உலகமயமாக்கல் என்ற நவீன கொள்கைகளுக்குள்ளும்,உலக பயங்கரவாத எதிர்ப்பு என்ற முரண்பாடான வலைசிக்கல்களுக்குள்ளும் விடுதலைக்காக போராடும் தேசங்கள் காணாமல் போகின்றது என்பதே யதார்த்தம்.
இந்த நவீன கொள்கை ஒட்டுமொத்தமாக உலகதமிழினத்தின் விடுதலைக் குரலை நசுக்கி எமது போராட்டத்தை குழிதோண்டி புதைத்திருக்கிறது.

எந்த ஒரு நாட்டினது உதவியின்றி எம்கைகளை நம்பியே நாம் போராடினோம்.
எம்மை அழிக்கவந்தவரது கைகளை தடுக்க எங்களது வலிமையையே நம்பினோம்.ஆனால் சிங்களபேரினவாதமோ உலகெங்கும் ஓடிச்சென்று ஒப்பந்தங்கள் செய்து,ஆயுதங்களை குவித்து ஈழதேசத்தில் அரக்கதாண்டவத்தை அரங்கேற்றியது.சர்வதேசம் ஒருதேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தை புரிந்து கொள்ளாமல் சிங்கள பேரினவாதத்தின்
போலிப்பரப்புரைகளை நம்பியது எப்படி?உலகத்தின் தெருக்களெல்லாம் எம்மக்கள் கண்ணீரோடு திரண்டு நின்ற போதும் எமது போராட்ட நியாயத்தை சர்வதேசத்தின் செவிகளுக்குள் உரக்க சொல்வதற்கு நாம் தவறிவிட்டோம்
என்பதே உண்மை.

எம் வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளுடன் நாம் போரிட்டோம், தாங்க முடியாத சுமைகளை எம்மக்கள் சுமந்து கொண்டனர்.ஆனாலும் எமது நியாயமான குரலை,எவராலும் மனித நேயத்துடன் புரிந்து கொள்ளவில்லையே என்ற கனத்த மனதோடு காத்திருக்காமல் சர்வதேசத்தின் செவிகளுக்கு எமதுஉரிமையின் அவசியத்தை உணர்த்திக் கொண்டே இருப்போம்.

இப்போது  தாயகத்தில் நடப்பது என்ன?

காணமல்போதல்,கடத்தல்கள்,கைதுகள்,படுகொலைகள் மீண்டும் தொடர்கதையாகிறது.கட்டுப்படுத்த முடியாத களையாக கலாசார சீரழிவு தொடர்கிறது.தமிழினம்,தமிழ்நிலம்,சிங்கள மயமாக்கபடுகிறது.இந்நிலை எம் தேசியத்தை அழிவுப் பாதைக்கே கொண்டு செல்லும் என்பதே உண்மை.
இந்நிலையில் தமிழினம் திரண்டெழுந்து உரிமைக்காக குரல் கொடுக்கவேண்டும்.
இன்றுவரை தமிழ் மண்ணுக்காக போராடி தம்முயிர்விதைத்த உறவுகளை எங்கள்மனங்களிலிருத்தி அவர்களின் இலட்சியத்தை சுமந்தபடி நடப்போம்.

சிங்கள பேரினவாதத்தால் திட்டமிட்டு உருவாக்கப்படும் புலனாய்வுரீதியான பொய்ப்பரப்புரைகள் உட்பட தமிழ்மக்களுக்குள்உலவுகின்றமுரண்பாடுகளை களைந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையையும்,வழிகாட்டலையும்,
ஏற்று மண்ணுக்காக ஆகுதியான மாவீரர்களினதும்,மக்களினதும்,கனவுகளை வென்றெடுக்க உணர்வுரீதியாக ஒன்றுபட்டு ஒன்றுதிரள தமிழ்தேசியத்தின் பெயரால் வேண்டிக்கொள்கிறேன்.

“புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்”

இவ்வண்ணம்,
இன்றுவரை களமுனையில்
களமாடும்புலனாய்வுப்போராளி.
மா.ஆதித்தன்

Leave a comment

யாழ்ப்பாணத்தில் பெருமளவில் ஊடுருவும் ‘றோ

யுத்தம் முடிவடைந்துள்ளதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள புதிய சூழலில் இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் அகலக் கால் பதிக்கும் நடவடிக்கைகளில் இந்திய உளவு நிறுவனமான றோ ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கைகளுக்காக தமிழகத்தைச் சேர்ந்த பெருமளவான றோ உறுப்பினர்கள் தமிழர் தாயகத்தில் களமிறக்கப்பட்டுள்ளதாக எமது யாழ்ப்பாண நிருபர் தெரிவிக்கின்றார்.

சோதிடம் சொல்பவர்கள் மற்றும் புடவை வியாபாரிகள் என்ற போர்வையில் களத்தில் குதித்துள்ள இந்த உளவாளிகள் நகரப் பகுதிகளில் மட்டுமன்றி தீவகம் உள்ளிட்ட உட் பிரதேசங்களிற்குள்ளும் சென்று வியாபாரம் என்ற போர்வையில் உளவுத் தகவல்களைச் சேகரித்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

வீடு வீடாகச் செல்லும் இவர்கள் மிகக் குறைந்த விலையில் இந்திய ஆடை வகைகளை விற்பனை செய்வதால் மக்கள் மத்தியில் ஏற்படும் நன்மதிப்பைப் பயன்படுத்தி அவர்களோடு நீண்ட நேரம் உரையாடித் தகவல்களைத் திரட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் கோண்டாவில் பகுதியில் சோதிடர் என்ற போர்வையில் வீடொன்றிற்குச் சென்ற உளவாளி நீண்ட நேரம் உரையாடி விட்டு திரும்பவும் விடுதலைப் புலிகள் பலம் பெறும் சாத்தியம் உள்ளதா, உங்கள் பிள்ளைகளை திரும்பவும் யுத்தத்திற்கு அனுப்புவீர்களா போன்ற கேள்விகளை நாசுக்காகத் தொடுத்ததாகவும் சுதாகரித்துக் கொண்ட வீட்டிலிருந்த பெண்கள் நீங்கள் உளவுத் துறையைச் சேர்ந்தவரா என நேரடியாகக் கேட்டதும் மழுப்பலாகப் பதிலளித்து விட்டு அருகிலிருந்து வீடுகளுக்கும் செல்லாது பேருந்தில் ஏறிச் சென்று விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது போன்ற பேர்வழிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி தமிழர் தாயக மக்கள் கேட்கப்படுகிறார்கள்.

SOURCE: http://www.eelamweb.com

Leave a comment

சிங்கள பயங்கரவாதிகளின் இனப்படுகொலை வெற்றி விழாவை இயற்கை தடுத்து நிறுத்தியது?

யுத்த வெற்றியின் முதலாம் ஆண்டு விழா மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு

தற்போதுகாணப்படும் சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் வியாழக்கிழமை கொண்டாடவிருந்த யுத்த வெற்றி விழா மறுஅறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தேசிய பாதுகாப்பிற்கான ஊடக நிலையத்தின் பணிப்பாளர் லஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் இராணுவ நடவடிக்கைகளின் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அதன் முதலாவது ஆண்டு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவந்தன.

இந்தக் கொண்டாட்டங்களின் இறுதி நிகழ்வு எதிர்வரும் 20ஆம் திகதி வியாழக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் கொழும்பு, காலி முகத்திடலில் நடத்த ஏற்பாடாகியிருந்தது.

இருப்பினும் தற்போது நிலவி வரும் காலநிலை காரணமாக யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களை நடத்துவதில் அரசாங்கம் சிக்கல் நிலையினை எதிர்நோக்கியுள்ளது.

இந்நிலையிலேயே யுத்த வெற்றி விழாக் கொண்டாட்டத்தினை மறுஅறிவித்தல் வரை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.

http://www.tamil.dai…�கள்/2474

Leave a comment

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலமர்வு நேரடியாக ஒளிபரப்பு!

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அரசவையின் முதலாவது அமர்வின் ஆரம்ப நிகழ்வு, இன்று மே மாதம் 17 திகதி அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில், அமெரிக்காவின் அரசியலமைப்பு வரையப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் மிக்க சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆரம்ப நிகழ்வின் நேரடி ஒளிபரப்பை எமது இணையத்தளமாகிய http://www.govtamileelam.org ஊடாக ஒளிபரப்புவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதனை மக்களுக்கு அறியத் தருகிறோம் என்றும் –

இந்த ஒளிபரப்பு பிலடெல்பியா நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பிப்பதால் ரொறன்ரோ நேரப்படி பிற்பகல் 1 மணிக்கும், பிரித்தானியா நேரப்படி மாலை 6 மணிக்கும், ஐரோப்பிய நேரப்படி மாலை 7 மணிக்கும் ஒளிபரப்பு ஆரம்பமாகும் என்றும் நாடு கடந்த தமிழீழ அரசின் அனைத்துலக செயலகம் தெரிவித்துள்ளது.

நன்றி
ஈழநேசன்

Leave a comment

நாடு கடந்த தமிழீழ அரசின் முதலாவது அமர்வு அமெரிக்காவில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு!

நாடு கடந்த தமிழீழ அரசின் முதலாவது அமர்வு முன்னர் அறிவிக்கப்பட்டவாறு மே
மாதம் 17 – 19 ஆம் திகதிகளுக்கிடைப்பட்ட காலப்பகுதியில் அமெரிக்காவின்
பிலடெல்பியா நகரில், அமெரிக்காவின் அரசியலமைப்பு வரையப்பட்ட வரலாற்று
முக்கியத்துவம் மிக்க சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள மண்டபத்தில்
கூடுகிறது என்று அதன் இணைப்பாளர் விசுவநாதன் ருத்ரகுமாரன்
தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு
செய்யப்பட்ட அனைவருக்கும் முதற்கண் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்
கொள்கிறோம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அரசவையின்
முதலமர்வு முன்னர் அறிவிக்கப்பட்டவாறு மே மாதம் 17 – 19 ஆம்
திகதிகளுக்கிடைப்பட்ட காலப்பகுதியில் அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில்,
அமெரிக்காவின் அரசியலமைப்பு வரையப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் மிக்க
சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் கூடுகிறது என்பதனை தாயக,
தமிழக மற்றும் உலகத் தமிழ் மக்களுக்கு அறியத்தருவதில் நாம் பெரு
மகிழ்வடைகிறோம்.

முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை முறியடித்து விட்டதாக
இறுமாப்படைந்திருக்கும் சிங்கள இனவாதப்பூதத்துக்கு நாடு கடந்த ஈழத் தமிழர்
தேசம் அடுத்த கட்ட விடுதலைப் போராட்டத்துக்கு தன்னைத்
தயார்ப்படுத்தியுள்ளது என்ற செய்தியினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்
முதலமர்வு எடுத்தியம்புகிறது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையானது தனது முதலமர்வினை
அரசியல் நிர்ணயசபையாக மாற்றியமைத்து, இவ் அரசாங்கத்துக்கான அரசியலமைப்பு
(Constitution) உருவாக்கும் அரசியலமைப்புக்குழுவினை அமைத்துக் கொள்ளும்
எனவும் அரசியலமைப்பினை உருவாக்கி முடியும் வரையிலான காலப்பகுதியில்
செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக ஒரு இடைக்கால நிறைவேற்றுக்குழுவினையும்
அமைத்துக் கொள்ளும் எனவும் மதியுரைக்குழுவின் அறிக்கை பரிந்துரை
செய்திருந்தது.

மேலும், தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அவசர, குறுங்கால
திட்டங்களினை முன்னெடுப்பதற்காக பொருத்தமான அமைச்சுக்
கட்டமைப்புக்களினையோ, சட்டவாக்க குழுக்களினையோ உருவாக்குவதனையும்,
இடம்பெயர்ந்த மற்றும் தடுத்து வைக்கப்பட்டிருப்போர் தொடர்பான விடயங்களைக்
கையாள்வதற்காக ஒரு செயற்பாட்டணி அமைக்கப்படுதல் பற்றியும் முதலாவது அமர்வு
கவனத்திற் கொள்ள வேண்டும் எனவும் மதியுரைக்குழு அறிக்கையில்
குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில், தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை நாடு
கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவை அமர்வுக்கு அழைத்து,
மேற்குறிப்பிடப்பட்ட மதியுரைக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அரசவை
நிகழ்வுகள் நடைபெறும் வழிவகைகளை மேற்கொண்டு, மக்களால் தெரிவு செய்யப்பட்ட
பிரதிநிதிகளிடம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை நடத்திச் செல்லும்
பொறுப்பை ஒப்படைக்கும் வரை முன்னெடுக்கப்படவேண்டிய பணிகளை
அங்குரார்ப்பணக்குழு சார்பில் அதன் தலைவர் பேராசிரியர் நடராஜா
சிறீஸ்கந்தராஜா அவர்கள் பொறுப்பேற்று ஒருங்கிணைத்து வருகிறார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்குவதற்காக நாம் எடுத்து வந்த
முயற்சிகளில் மிகுந்த சவால்களைத் தாண்டியே முன்னேறிச் செல்ல
வேண்டியிருந்தது. இச் சவால்களை எதிர்கொண்டு முன்னேறுவதற்காக
மதியுரைக்குழுவும் நாடுவாரியான செயற்பாட்டுக்குழுக்களும் மிகுந்த
அர்ப்பணிப்போடு செயற்படவேண்டியிருந்தது. வீண்பழிகளையும், அவதூறுகளையும்,
சில அவமானங்களையும் தாண்டித்தான் இவர்கள் தமது பணியினை
முன்னெடுத்திருந்தார்கள். இவர்களின் துணிச்சலான செயற்பாடுதான் நாடு கடந்த
தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கத்துக்கு வழிகோலியது. இச்
செயற்பாட்டாளர்களுக்கு இத் தருணத்தில் எமது வாழ்த்துக்களையும்
பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்குவதற்கான எமது பணியினை
முன்னெடுப்பதற்கு சில ஊடகங்களின் இருட்டடிப்பு மற்றும் அவதூறுப்
பரப்புரைகளுக்கு மத்தியிலும் பல தமிழ் ஊடகங்கள் பெரிதும் உறுதுணையாக
இருந்து வந்தன. இவ் ஊடக நண்பர்களின் கரங்களை நாம் நன்றியுணர்வுடனும்
தோழமையுணர்வுடனும் இறுகப் பற்றிக் கொள்கிறோம்.
இத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டவர்கள் மட்டுமன்றி வேட்பாளர்களாகப்
போட்டியிட்ட அனைவரையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை
வளர்த்தெடுப்பதற்கு தமது பங்களிப்பை வழங்க முன்வந்தவர்களாகவே நாம்
கருதுகிறோம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை வளர்த்தெடுப்பதற்கான பங்களிப்பை இவர்கள் தொடர்ந்தும் வழங்குவார்கள் என நம்புகிறோம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான மக்கள் பிரதிநிதிகளாக நேரடித்
தேர்தல்கள் மூலம் 115 பிரதிநிதிகளைத் தெரிவு செய்வது நன்றென மதியுரைக்குழு
பரிந்துரை செய்திருந்தது.

இவர்களில் 87 பிரதிநிதிகள்,

கனடா (25),
அமெரிக்கா (10),
பிரித்தானியா (17),
சுவிற்சலாந்து (10),
பிரான்ஸ் (7),
ஜேர்மனி (3),
நோர்வே (3),
டென்மார்க் (3),
சுவீடன் (1),
அவுஸ்திரேலியா (6),
நியுசிலாந்து (2)

ஆகிய நாடுகளில் இருந்து இதுவரை தெரிவு செய்யப்;பட்டுள்ளார்கள்.

இத்தாலி (3),

Benelux (நெதர்லாந்து, பெல்ஜியம், லக்ஸ்;சம்பேர்க்) (3),
பின்லாந்து (1),
அயர்லாந்து (1)

ஆகிய நாடுகளிலில் இருந்து தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யப்படவேண்டிய 8
பிரதிநிதிகளின் தெரிவு சில நடைமுறைப் பிரச்சினைகளால் அடுத்த
கட்டத்துக்குப் பிற்போடப்பட்டுள்ளது.

பிரித்தானியா (3),
பிரான்ஸ் (3)

ஆகிய நாடுகளில் இடம் பெற்ற தேர்தல்களில் முறைகேடுகள் தொடர்பான
முறைப்பாடுகள் குறித்த நடவடிக்கைகளால் மேலும் 6 பிரதிநிதிகளின் தெரிவும்
தாமதமாகின்றது.

ஜேர்மனியின் இரு தேர்தல் தொகுதிகளில் தேர்தல்களை பொது நிறுவனம் ஒன்று
பொறுப்பெடுக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமையால் அங்கு இன்னும்
தெரிவு செய்யப்படவேண்டிய 7 பிரதிநிதிகளுக்குரிய தேர்தல்கள் யூன் மாதம் 20
ஆம், 27 ஆம் திகதிகளில் இடம் பெறவுள்ளன.

அவுஸ்திரேலியாவில் இருந்தும் நியு சவுத் வேல்ஸ் (NSW) மாநிலத்தில்
இ;ருந்து 4 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவேண்டியுள்ளனர். இவ்வகையில்
இன்னும் 25 பிரதிநிதிகள் நேரடித் தேர்தல் மூலம் நாடு கடந்த தமிழீழ
அரசாங்கத்துக்கான மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

இவற்றை விட, தென்னாபிரிக்காவில் நேரடித் தேர்தல் மூலம் தெரிவு
செய்யப்படுவதற்கு மதியுரைக்குழுவினரால் பரிந்துரைக்கப்பட்ட 3
பிரதிநிதிகளின் தெரிவு நேரடித் தேர்தல் தவிர்ந்த வேறுமுறையில்
மேற்கொள்ளப்படுவதே நடைமுறையில் பொருத்தமானது என்ற தமது கருத்தினை
தென்னாபிக்கா செயற்பாட்டுக்குழு எமக்குத் தெரிவித்துள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான மக்கள் பிரதிநிதிகள் எல்லோரையும் ஒரு
முறையிலேயே தேர்ந்தெடுக்க முடியாது போனாலும், தேர்ந்தெடுக்கப்பட
வேண்டியவர்களில் முக்கால் பங்குக்கும் மேற்பட்டவர்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சூழலில், மே மாதம் 17-19 ஆம் திகதிகளின் கால
மற்றும் குறியீட்டு முக்கியத்துவம் கருதி நாம் முன்னர் அறிவித்தவாறே அக்
காலப்பகுதியில் முதலாவது அமர்வினைக் கூட்டுவது அவசியமானதென நாம்
கருதியமையினால் திட்டமிட்டவாறு முதலமர்வு இப்போது கூட்டப்படுகிறது.
இயன்றளவு விரைவாக ஏனைய பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்படுவதற்கு ஆவன
செய்யப்படும்.

தேர்தல் முறைகேடுகள் தொடர்பான முறைப்பாடுகளை அவ்வவ் நாடுகளின் தேர்தல்
ஆணையங்களே கையாள்கின்றன. நியாயமான முறையில் இவை கையாளப்பட்டு, இவை
தொடர்பான ஒரு வெளிப்படையான அறிக்கைகையை உரிய தேர்தல் ஆணையங்கள் மக்களுக்கு
வெளியிடுவார்கள் என்பதே எமது எதிர்பார்ப்பு.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல்களில், தேர்தல் ஆணையம் மற்றும்
தேர்தல் குழுக்களில் பணியாற்றுபவர்கள் தவிர்ந்த ஏனைய அனைவரும்
வேட்பாளர்களாகப் பங்கு பற்றலாம் என்பதே பொதுவான ஏற்பாடாக இருந்தது.

இருந்த போதும் சில நாடுகளின் செயற்பாட்டுக்குழுக்கள் இவ்வாறு தேர்தலில்
போட்டியிடுவோர் செயற்பாட்டுக்குழுவில் இருந்து விலக வேண்டும் என்ற
நடைமுறையினைத் தமக்குள் பின்பற்றியிருந்தனர்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான இடைக்கால நிறைவேற்றுசபை
உருவாக்கப்பட்டு அச்சபை கடமைகளைப் பொறுப்பேற்கும் போது நாடு கடந்த தமிழீழ
அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழுவும் நாடுவாரியான
செயற்பாட்டுக்குழுக்களும் தமது பணிகளை நிறைவுக்குக் கொண்டு வரும்.
– இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி
ஈழநேசன்

Leave a comment

சிறீலங்காவில் சீனர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து பத்தாயிரம்?

இலங்கையின்
முக்கிய நிறுவனங்களுக்குக் கீழுள்ள இரு பணித்திட்டங்களான திருகோணமலை
மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களின் பணிகளுக்காக இலங்கைக்கு அழைத்து
வரப்படும் சீனத் தொழிலாளர்கள் குறித்து இந்தியாவும், அமெரிக்காவும் தமது
கோபத்தை வெளிப்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இன்றைய
திகதியில் இலங்கையில் உள்ள சீனர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து பத்தாயிரம்
ஆகும். இவர்களில் பெரும்பாலானவர்கள் முன்பு சீனாவின் சிவப்பு ராணுவப்
பிரிவில் இருந்தவர்கள். எஞ்சியோர் சீன சிறைகளில் இருந்தவர்கள் எனத்
தெரியவந்துள்ளது.

புலிகளுடனான
போரில் ஆயுதம். நிதி மற்றும் பிற வகைகளிலும் உதவியாக இருந்தது சீனாவே.
எனவே இலங்கையிலுள்ள சீனர்களைப் புலிகள் தாக்கலாம் என்ற சந்தேகத்தில்
அவர்களுக்குச் சிறப்புப் பாதுகாப்பையும் இலங்கை வழங்கியுள்ளது.

இவற்றின்
விளைவாக, இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்துவிட்டாலும் பொருளாதார
மற்றும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த வடக்குக் கிழக்குப் பகுதிகளைத் தமது
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா
ஆகியவற்றுக்கிடையே பனிபோர் தொடங்கியுள்ளதாக அரச உயர் அதிகாரி ஒருவர்
கூறுகிறார்.

Leave a comment

முத்துக்குமார் சிலை திறப்புக்கு தமிழக காவல்துறை தடை

தஞ்சாவூரில் அமைக்கப்பட்டுள்ள முத்துக்குமாரின் சிலையைத் திறக்க காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதனால் சிலை அமைப்பாளர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஈழத் தமிழ் போராட்டம் தீவிரமாக இருந்தபோது சென்னை சாஸ்திரி பவன் வளாகத்தில் தீக்குளித்து உயிர் நீத்தார் முத்துக்குமார். இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து பலர் தமிழகத்தில் உயிர் நீத்த சம்பவங்கள் நடைபெற்றன. தற்போது முத்துக்குமாருக்கு தஞ்சை மாவட்டத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி நான்கு சாலை பிரிவில் புலவர் ரத்தினவேலு என்பவர், முத்துக்குமாருக்கு சிலை அமைக்க இடம் கொடுத்தார்.

இளந்தமிழர் இயக்கத்தினர் தானமாக பெற்ற இந்த இடத்தில் முத்துக்குமாருக்கு சிலை அமைக்கும் பணியை மேற்கொண்டு முடித்துள்ளது. இன்று(மே-16) இளந்தமிழர் இயக்கம் மற்றும் தமிழ் தேசிய பொதுவுடமை கட்சியினர் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து சுடர் ஓட்டம் ஆரம்பித்து மாலை 5 மணிக்கு சிலை அருகே வருவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழ் தேசிய பொதுவுடமை கட்சி பொதுச்செயலாளர் பெ.மணியரசன் சிலையை திறந்து வைக்கவிருந்தார். சிலை திறப்பு விழாவில் புலமைபித்தன், காசி ஆனந்தன், முத்துக்குமார் தந்தை குமரேசன், இயக்குநர் ராம், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் உட்பட பலர் கலந்து கொள்வதற்காக அனைவரும் சிலை திறப்பு விழா இடத்திற்கு வந்துகொண்டிருந்தனர்.

ஆனால், இந்த சிலை திறப்பு விழாவிற்கு காவல்துறை அனுமதி கொடுக்காததால் இன்று மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் மட்டும் நடைபெறுகிறது.

Leave a comment

நாலாவது ஈழப்போரில் வடபகுதியில் 260,000 வீடுகள் சேதம்: அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கம்

சிறீலங்கா படையினர் மேற்கொண்ட படை நடவடிக்கைகள் காரணமாக கடந்த 3 வருடங்களில் வடபகுதியில் 260,000 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது:

நாலாவது ஈழப்போரில் வடபகுதியில் படையினர் மேற்கொண்ட தாக்குதல்களில் 260,000 வீடுகள் சேதமடைந்துள்ளதாக உதவிநிறுவனங்களும், அரசு சார்ப்பு அமைப்புக்களும் கணிப்பிட்டுள்ளன.

இடம்பெயர்ந்த மக்களில் பல்வேறு இடங்களிலும், தமது உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ள மக்கள் அவர்களிற்கு பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும்.

முகாம்களில் இருந்து 207,000 மக்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 80,246 மக்கள் வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் உள்ள முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என அது மேலும் தெரிவித்துள்ளது.

Leave a comment

நாடு கடந்த தமிழீழ அரசும், இரா. துரைரத்தினமும்! ஒற்றுமை குறித்து காகங்கள் பேசலாம், ஓநாய்கள் பேசலாமா?-ஈழநாடு

முள்ளிவாய்க்கால் வரை முழங்கி நீட்டினார்கள். முடிவுக்கு வந்ததும் முடங்கிப்போய் இருந்தார்கள். கூட்டமைப்புத் தேர்தல் வந்ததும் குதித்து எழுந்தார்கள். இப்போது அவர்களுக்கு இரை போடுவது நாடு கடந்த தமிழீழ அரசு என்ற யுத்த களம். இலங்கைத் தமிழ் ஊதிய ஊடகவியலாளர்களின் இன்றைய நிலவரம் இதுதான்.

சிங்கள தேசத்தின் இருதுருவக் கோட்பாட்டுக்குள் விலை போயுள்ள எத்தனையோ மனிதப் பிறவிகள் இப்போது எம் மத்தியில் தத்துவம் பேசிக்கொண்டு வருகின்றார்கள். பாவம், அவர்கள் கூறி விற்க முணலும் சிங்கள யுக்திகளை புலம்பெயர் தமிழர்கள் கொள்வதற்கு முன் வருகின்றார்கள் இல்லை. சிங்கள தேசம் அறிவித்தது போலவே, நாடு கடந்த தமிழீழ அரசை வேரோடு பிடுங்க நியமித்த இவர்களால், இதைத் தவிர என்னதான் செய்துவிட முடியும்?

நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல்களில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பற்றிய சந்தேகங்களை இந்தச் சதிகாரர்கள் எப்படித் துல்லியமாகத் தெரிந்து கொண்டார்களோ அறியேன். நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பிரான்ஸ் – பாரிஸ் நகரில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் என்ற வகையில் எழுப்பப்படும் கேள்விகளுக்கான பதில்களை இரா. துரைரத்தினம் போன்ற குழப்பவாதிகளுக்கு வழங்குவது கடமை எனக்கு உண்டு.

முள்ளிவாய்க்காலுக்குப் பிந்திய காலங்கள் ஈழத் தமிழர்களின் வேதனைக் காலம் மட்டுமல்ல, சோதனைக் காலமும் கூடத்தான். விடுதலைப் புலிகள் கள முனையில் தோற்கடிக்கப்பட்டு, ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர், விடுதலைப் புலிகளின் தலைமையில் ஏற்பட்ட வெற்றிடத்தைக் கைப்பற்றும் தீவிர நடவடிக்கைகள் இலங்கைக்கு வெளியே தீவிரம் பெற்றது. யேசுநாதர் உயிர்த்தெழுந்தார் என்று கிறிஸ்தவர்கள் நம்புவது போல், சுபாஸ் சந்திரபோஸ் விமான விபத்தில் இறக்கவில்லை என்று இந்தியர்கள் நம்புவது போல், தேசியத் தலைவர் குறித்த சிங்களத் தகவல்களை நிராகரித்த ஈழத் தமிழர்கள் அவரது மீள் வரவுக்காகக் காத்திருக்கிறார்கள். அதுவரை, தேசியத் தலைவர் அவர்களால் புலம்பெயர் தேசத்து மக்களிடம் வழங்கப்பட்ட தமிழீழ மீட்புக்கான போராட்டத்தை ஒவ்வொரு தமிழரும் சுமக்க முன்வந்துள்ளனர். அதற்காகக் களம் இறங்கியுள்ளார்கள்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்பது யாருடைய பரம்பரைச் சொத்தல்ல. அதைப் பிரேரிதத்தவர் யாராக இருந்தாலும், அந்தப் போர்க்களத்தை புலம்பெயர் தமிழர்கள் முற்றாக நம்புகின்றார்கள். அந்தப் போர்க் களத்தில் தாமும் போராளிகளாகப் பங்கேற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். அதனால்தான், எந்த வேறுபாடுகளுமின்றி ஈழத் தமிழர்களின் அத்தனை அமைப்புக்கள் சார்ந்தவர்களும் அதில் போட்டியிட்டார்கள். பலர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இது மக்கள் வழங்கிய ஆணை. இந்த மக்கள் ஆணையை விமர்சிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. தமிழீழ மக்களில் மிகச் சிறுபான்மையினரின் வாக்குக்கள் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவாகியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை ஏற்றுக்கொண்டு துதி பாடும் திரு. இரா. துரைரத்தினம் அவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் போட்டியிட்டு, தெரிவான உறுப்பினர்கள் மீது சந்தேகங்களைத் தெரிவிப்பது அவர் சார்ந்த ஊடகத் துறைக்கு உகந்தது அல்ல.

நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் மக்கள் பேரவைகளைச் சார்ந்த பலர் வென்றிருக்கிறார்கள். அவர்கள் அவ்வாறு தேர்வு செய்யப்பட்டுள்ளதால், நாடு கடந்த தமிழீழ அரசைக் கைப்பற்றி, அதன் செயற்பாடுகளை முடக்கி விடுவார்கள் என்ற தகவல்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல முற்படுபவர்களது நோக்கம் சந்தேகத்திற்கிடமானது. மக்கள் பேரவை பற்றியும். அதன் உருவாக்கம், செயற்பாடுகள், நோக்கங்கள் பற்றியும் அறியாத முட்டாள்களின் கூற்றாகவே இது கணக்கிடப்பட வேண்டும். இரா. துரைரத்தினம் போன்றவர்கள் வேண்டாத கேள்விகளையும், நியாயங்களையும் எழுப்பி நாடு கடந்த தமிழீழ அரசுக்காகத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களிடையே பிளவுகளையும், மோதல்களையும் உருவாக்க முயற்சிக்கின்றனர்.

நாடு கடந்த தமிழீழ அரசின் முதலாவது அமர்வே நடைபெறாத நிலையில், அது இப்படித்தான் நடக்கும், அது இப்படித்தான் முடியும் என்று எதிர்வு கூறுவது முடிவு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரலுக்குள் உருவாகிவரும் நாடு கடந்த தமிழீழ அரசை அழைத்துச் செல்லும் முயற்சியாகவே கருதப்படுகின்றது. நாடு கடந்த தமிழீழ அரசுக்கான இணைப்பாளர் திரு உருத்திரகுமாரன் அவர்களை ஓரங்கட்டும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளார்கள் என்ற கருத்துருவாக்கம் மூலம் திரு. உருத்திரகுமாரன் அவர்களுக்கும், நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பிரதிநிதிகளுக்கும் இடையே சந்தேகங்களையும், முரண்பாடுகளையும் உருவாக்குவதே திரு. இரா. துரைரெத்தினம் போன்றவர்களது எண்ணமாக உள்ளது.

நாங்கள் அனைவருமே விடுதலைப் புலிகளது தியாகங்கள் ஊடாக வளர்ந்தவர்கள். அவர்களது வேள்வித் தீயின்வெப்பத்தினால் மாசு அகற்றப்பட்டவர்கள். தேசியத் தலைவர் அவர்களது பாதையில் பயணிப்பவர்கள். தமிழீழ விடுதலைக்காக எதையுமே இழக்கத் தயாரானவர்கள். அந்த இலட்சியப் பாதையில் எங்களது அணிவகுப்பு இரா. துரைரெத்தினம் போன்றவர்களுக்கு கசப்பாகவே இருக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடாக தமிழ்த் தேசியத்தை மாகாணங்களுக்குள் முடக்கும் சிங்களச் சதிக்கு நாம் தடைக் கல்லாக மாறிவிடுவோம் என்ற அச்சத்தில் திரு. இரா. துரைரெத்தினம் மட்டுமல்ல மேலும் சில ஊதிய ஊடகவியலாளர்கள் எழுதவேதான் செய்வார்கள். அதனை, தேசிய ஊடகவியலாளர்கள் முறியடிக்கவே செய்வார்கள்.

நாடு கடந்த தமிழீழ அரசின் இணைப்பாளர் உருத்திரகுமாரன் அவர்களது தமிழ்த் தேசிய விடுதலைக்கான உறுதியிலும், நேர்மையிலும், தியாகத்திலும் நம்பிக்கை வைத்தே அனைத்து வேட்பாளர்களும் களத்தில் இறங்கினார்கள். மண்ணிலும், கடலிலும் வீழ்ந்த மாவீரர்களின் கனவான தாயக மீட்பு இலட்சியப் பாதையிலிருந்து விலகாத வரைக்கும் திரு. உருத்திரகுமாரனின் தலைமை மீது யாரும் எதிர்க் கருத்து வைக்கப் பேவதில்லை. அவரை ஓரங்கட்டப் போவதுமில்லை.

திரு. உருத்திரகுமாரன் அவர்கள் தேசியத் தலைவர் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர். தாயக விடுதலை குறித்த ஆழமான பற்று உள்ளவர். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நன்றாக உணர்ந்தவர். அவர் மீது அனைத்துத் தமிழர்களும் அளவு கடந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள். நாமும் அந்த அடிப்படையிலேயே நாடு கடந்த தமிழீழ அரசில் இணைந்து பணியாற்ற முன் வந்துள்ளோம். இந்தப் போர்க் களத்தில் எங்கள் ஒற்றுமையைச் சிதைக்க முடியும் என்று யாரும் கனவு கூடக் கண்டு விடாதீர்கள்.

ஒற்றுமை குறித்து காகங்கள் பேசலாம், ஓநாய்கள் பேசலாமா?

http://www.pathivu.com/?p=445

Leave a comment