Author Archives: malathi arulmani

About malathi arulmani

என்னை பற்றி சொல்ல பெரியதாக ஒன்னும் இல்லைங்க .electronics communication படித்து கம்ப்யூட்டர் சர்வீஸ் செய்து வருகிறேன்

முள்ளீவாய்க்காலை மறக்க கூடாது; தற்கொலை செய்துள்ள மாணவனின் வேண்டுதல்

சென்னை: சென்னை [^] நுண் கலைக் கல்லூரியில் நேற்று தற்கொலை [^]செய்து கொண்ட மாணவர் சசிக்குமார் எழுதியுள்ள கடிதத்தில், முள்ளிவாய்க்கால் சம்பவத்தை உலகம் மறந்தாலும், தமிழர்கள் [^] மறக்கக் கூடாது என்று எழுதியுள்ளதால் இந்தத் தற்கொலைக்கான காரணம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. சென்னை எழும்பூரில் உள்ள நுண்கலைக் கல்லூரியில் படித்து வந்த மதுரை விளாங்குடியைச் சேர்ந்த … Continue reading

Leave a comment

இரண்டு கைகளும் இயலாமல் போனவனிற்கு ஒரு கையாவது கொடுங்கள்

இந்த நூற்றாண்டு எமது மக்களின் சோகப் பக்ககளை மட்டுமே காலப்பதிவாக்கி செல்கின்றது….பல இலட்சம் விழிகளிலிருந்து வழியும் கண்ணீரில் ஒரு சிலதையாவது துடைத்து செல்லும் எமது முயற்சியில் இதோ இன்னொருவனின் கதையிது…… திருகோணமலை மாவட்டம் அன்புவழிபுரம் கிராமத்தை சேர்ந்தவன். மிக வேகமாக சிங்கள மயமாகிவரும் திருகோணமலையில் செந்தமாய் செய்வதற்கு தொழில் வசதிகளேதுமற்று சமாதான காலத்தில் வன்னி சென்றால் … Continue reading

Leave a comment

சிறீலங்காவின் இனப்படுகொலையின் இன்னொரு சாட்சியம் – கணேசபுரம் புதைகுழி

கிளிநொச்சி – கணேசபுரம் பகுதியில் மலசலகூடக்குழியில் இருந்து மனித உடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இருபதிற்கு மேற்பட்ட உடலங்கள் இதில் உள்ளடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்கா அரசின் இனப்படுகொலை வரலாறாக நீடித்துக்கொண்டே செல்கின்றது. யாழ்ப்பாணத்தில் கிருசாந்தி என்ற பாடசாலை மாணவி பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்ட நிலையில் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. இதனை செய்தது சிங்களப்படைதான் என்பது … Continue reading

Leave a comment

புலிகளுக்கு ஆதரவு – ராமசாமி மீதான நடவடிக்கைக்கு இந்தியா கோரிக்கை

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாகப்பேசிய மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் ராமசாமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்நாட்டு அரசாங்கத்திடம் இந்தியா கோரியுள்ளது. அண்மையில் மதுரையில் நடைபெற்ற சீமானின் “நாம் தமிழர் அரசியல் மாநாட்டில்” கலந்து கொண்ட அவர், இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியுள்ளதுடன் “மலேசியாவில் எங்கள் … Continue reading

Leave a comment

யேர்மனியில் இருந்து கொழும்பு சென்ற ஈழத்தமிழ்ப் பெண் கைது!

யேர்மனியில் இருந்து கொழும்பு சென்ற ஈழத்தமிழ்ப் பெண் ஒருவர் சிறீலங்கா காவல்துறைப் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் சிலாபம் பகுதியை பிறப்பிடமாகவும், யேர்மனி பிராங்போர்ட் பகுதியை வதிவிடமாகவும் கொண்ட ஐம்பது அகவையுடைய இவர், யேர்மனியில் இருந்து கடந்த புதன்கிழமை கொழும்பை வந்தடைந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. யேர்மனியில் கடந்த ஆண்டு … Continue reading

Leave a comment

முள்ளிவாய்க்கால் முடிவுவரை ஓடியோடி உதவிய ஒரு உறவிற்காய் உதவுங்கள்

இவர்பெயர் வடிவேலு சதீஸ்கரன் முல்லைத்தீவு பொது வைத்திய சாலையில் ஒரு தொண்டு வைத்தியராக கடைமையாற்றியவர்.கடந்த வருடம் இறுதி யுத்தத்தின்போது குண்டுச்சத்தங்களும் அவலங்களும் ஓலங்களும் மட்டுமே நிறை;ந்திருந்த முல்லைத்தீவில் காயமடைந்தவர்களிற்கெல்லாம் ஓடியோடி கையிலிருந்த குறைந்த வளங்களை மட்டுமே வைத்துக்கொண்டு காயமடைந்தவர்களிற்கும். கைகால் இழந்தவர்களிற்கும் மருத்துவ முதலுதவி முயற்சிகளை மேற்கொண்டிருந்த சில சொற்ப வைத்தியர்களில் சதீஸ்கரனும் ஒருவர்.அவரின் ஒரு … Continue reading

Leave a comment

இலங்கை அரசின் போர்க்குற்றம் – மற்றொரு ஆதாரம் – காணொளி(கோரமானது)

இலங்கை அரசின் இனப்படுகொலை, போர்க் குற்றங்கள் குறித்த பல ஆவணங்கள் பல்வேறு தரப்பிலிருந்தும் வெளிவந்துள்ளன. கீழ் வரும் காணொளியில் மரணித்த புலி உறுப்பினர்கள் இலங்கை இராணுவம் விலங்குகளைப் போல வீசியெறிவதையும், இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதற்கு ஆதாரமாக கருகிய உடல்களையும் காணலாம். இந்தக் காணொளி பல சர்வதேச ஊடகங்களிற்கும், உரிமைக் குழுக்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தியப் படிப்பவர்கள் … Continue reading

Leave a comment

இந்த நாடு பற்றிய தகவல்கள் மற்றும் விவாதங்களை தொடருங்கள்.

சைப்ரஸ் தீவின் துருக்கி மொழிச் சிறுபான்மையினர் இனப்பிரச்சினை காரணமாக எழுந்த போரின் பின்னர் பிரிந்து தனி நாடு கண்டுள்ளனர். இன்று வரை துருக்கியை தவிர உலகில் வேறு எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை…ஏன் இப்படி ஒரு வழியிலாவது நாம் தமிழீழம் அமைக்கலாம். இந்த நாடு பற்றிய தகவல்கள் மற்றும் விவாதங்களை தொடருங்கள். http://en.wikipedia….Northern_Cyprus

Leave a comment

இராணுவத்தால் கைதுசெய்யப்பட்ட பிரான்சிஸ் யோசப் பாதிரியார் எங்கே?

இறுதி யுத்தத்தின் போது சிறிலங்காப் படையினரிடம் சரணைடைந்த பிரான்சிஸ் யோசப் பற்றிய தகவல்களை பெற்றுத்தருமாறு யாழ் ஆயர் இல்லம் கோரிக்கை விடுத்துள்ளது. வன்னிப்பகுதியில் கடமையாற்றி வந்த குறித்த பாதிரியார் இறுதி யுத்தத்தின் போது சிறிலங்காப் படையினரின் கட்டுப்பாட்டுக்கு மக்களோடு வந்தபோது அவரை கைது செய்த சிறிலங்காப் படையினர் இது வரை அவர் தொடர்பான தகவல்களை வெளியிடவில்லை. … Continue reading

Leave a comment

சிறீலங்காப்படையினர் போராளியை வெட்டி கொலை செய்யும் கோரம்!

வன்னியில் கடந்த வருடம் இறுதி யுத்தத்தில் சிறீலங்கா சிங்கள படைகளால் கைது செய்யப்பட்ட போராளிகளை கோரமாக வதை செய்து கொன்றது தொடர்பாக மேலும் சில காட்சிகள் தற்போது வெளிவந்துள்ளது. சிறீலங்காவின் சிங்கள படைகளின் காட்டு மிரண்டிதனமான போர் குற்ற ஆத்ரம்களில் சிலதை Human Rights Watch send email வெளியிட்டுள்ளது. இதில் ஒரு போராளியை தென்னை … Continue reading

Leave a comment